உலகின் 7 அதிசயங்கள்

நாம் வாழும் இந்த உலகில் பல்வேறு கட்டிடங்களை பார்த்திருக்கிறோம். இந்த கட்டிடங்கள் பல்வேறு மாற்றங்களை பல்வேறு காலகட்டத்தில் அடைந்துள்ளது. ஆனாலும் இன்றளவும் காலத்தினால் அழியாமல் மக்களின் மனதை கவர்ந்து ஒரு சில கட்டிடங்களே இந்த உலகில் நிலைத்து நிற்கின்றன.

அந்த வகையில் இந்த உலகின் பல நூற்றாண்டுகளாக காலத்தினால் அழியாமல் உள்ள ஏழு அதிசயமான கட்டிடங்களை வரிசைப்படுத்தி காண்போம்.

தாஜ்மஹால் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் தனது அன்பு மனைவி மும்தாஜுக்காக கட்டப்பட்டது. இந்த தாஜ்மஹால் 83 மீட்டர் உயரம் கொண்ட து மற்றும் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் ஆக்ரா நகரின் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

சீன பெருஞ்சுவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ளது. கிமு 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனாவின் பெரும் பகுதியை அவர்களின் எதிரிகள் மற்றும் படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க மிங் வம்சத்தின் போது (Ming dynasty) சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது.

சீனப் பெருஞ்சுவரில் தற்காப்பு கோட்டைகள், எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. முழு சுவர் மற்றும் அதன் அனைத்து கிளைகளும் 21,196 கி.மீ வரை நீண்டுள்ளதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சீனப் பெருஞ்சுவர் ஒவ்வொரு ஆண்டும் உலகத்திலிருந்து பல பார்வையாளர்களை ஈர்க்கிறது.

சிச்சென் இட்சா என்கிற இடம் மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ளது. இது மாயன் மக்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய கொலம்பிய நகரமாகும். இந்த அமைப்பு பிரமிட்டைப் போன்றது,

மேலும் இந்த பிரமிடு ஒவ்வொரு பக்கத்திலும் 91 படிகளைக் கொண்டுள்ளது மற்றும் இந்த அமைப்பு மொத்தமாக 365 படிகளைக் கொண்டுள்ளது, இது ஒரு சூரிய வருடத்தில் நாட்களின் எண்ணிக்கைக்கு (365 நாட்கள்) சமம். இதன் இறுதி மேடை வீனஸ் கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த சிச்சென் இட்ஸாவில் போர்வீரரின் கோயில், திறந்தவெளி மைதானம், வீனஸ் மேடை மற்றும் பிற இடங்கள் உள்ளன.

மீட்பர் கிறிஸ்து சிலை கோர்கோவாடோ மலையின் உச்சியில் அமைந்துள்ளது.. இந்த சிலையை ஹெய்டர் டி சில்வா கோஸ்டா (Heitor de Silva  Costa), கார்லோஸ் ஓஸ்வால்ட் (Carlos Oswald) மற்றும் பால் லாண்டோவ்ஸ்கி (Paul Landowski) ஆகியோர் வடிவமைத்து கட்டியுள்ளனர். இதன்  கட்டுமானம் 1926 இல் தொடங்கி 1931 இல் நிறைவடைந்தது.

இதன் அடித்தள உயரம் 8 மீட்டர் சேர்க்காமல் இந்த சிலை 30 மீட்டர் உயரம் கொண்டது,. இந்த சிலை மலை உச்சியில் 700 மீட்டர் உயரத்திலும் ரியோ டி ஜெனிரோ நகரத்தைப் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான மீட்பர் கிறிஸ்து சிலை, பிரேசில் மற்றும் ரியோ டி ஜெனிரோ நகரத்தின் பெருமையாக அறியபடுகிறது.

பெட்ரா என்கிற இடம் தெற்கு ஜோர்டானில் அமைந்துள்ள மிகப் பழமையான வரலாற்று நகரம். பெட்ரா நகரம் நபேடியன் இராச்சியத்தின் (Nabatean Kingdom) தலைநகராகவும், குறிப்பாக மசாலாப் பொருட்களுக்கான வர்த்தக மையமாகவும் செயல்பட்டது.

அதன் கல் மற்றும் மண் நிறத்தின் காரணமாக இந்த நகரம் பிங்க் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது . மேலும் வளைந்த, அதிர்ச்சியூட்டும் கட்டிடக்கலை மற்றும் சிக்கலான நீர் வழித்தடங்களை கொண்டுள்ளது.

1812 இல் சுவிஸ் ஆய்வாளர் ஜான் லுட்விக் பர்க்ஹார்ட்(John Ludwig Burckhard) என்பவர் இந்த நகரத்தை கண்டுபிடித்தார். இன்றளவும் இந்த நகரம் உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

Read Also: சோம்பேறி விவசாயி தமிழ் சிறுகதைகள்

இந்த மச்சு பிச்சு நகரம் ஆண்டிஸ் மலை தொடரில் கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மச்சு பிச்சு, கோயில்கள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளின் சான்றுகளைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த மச்சு பிச்சு நகரம் இன்கா நாகரிகத்தின் (inca Civilization) பெருமையாக கருதப்படுகிறது. மச்சு பிச்சுவின் நகர அமைப்பு உலர்ந்த பளபளப்பான கற்களால் கட்டப்பட்டுள்ளது.

கொலோசியம் என்பது நீள் வட்ட வடிவில் ரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள மைதானம் ஆகும். இந்த கொலோசியம் மைதானம் கி.பி 72 இல் பேரரசர் வெஸ்பாசியனால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி 80 இல் அவரின் வாரிசு டைட்டஸால் கட்டி முடிக்கப்பட்டது.

கொலோசியம் மைதானம் மிகப்பெரிய ஆம்பிதியேட்டர் ஆகும், இது கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்ட இந்த மைதானம் 50,000 பார்வையாளர்களை உள்ளடக்கும் திறன் கொண்டது.

இந்த அரங்கம் கிளாடியேட்டர் சண்டை, கைதிகளின் மரணதண்டனை, விலங்கு வேட்டை மற்றும் சில நேரங்களில் கடல் போர் பயிற்சிகள் போன்ற நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

இந்த கொலோசியம் ரோமானிய கலாச்சாரத்தின் சின்னமாகவும் மற்றும் பெருமையாக விளங்குகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது இன்று உலகின் 7 அதிசயங்களில் ஓன்றாக மாறியுள்ளது.

மேலே குறிப்பிட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

நன்றி.

Also click here for Software related post : www.rulatech.com