Electric scooterஐ வாங்கலாமா? வேண்டாமா? – in Tamil


கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள சில நன்மைகள், அதாவது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி ஓட்டுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.
 
எனவே ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்யும் வகையில் இதனுடைய நன்மைகள் மற்றும் தீமைகளை வரிசை படுத்தியிருக்கிறோம். முதலில் இதனுடைய 5 நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
1. Environment friendly 
சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியினால் இயங்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கரியமில வாயு மற்றும் புகைகளை வெளியிடுவதில்லை. ஆனால் நமக்கு கிடைக்கும் மின்சாரம் புகைகளை வெளியிடும் பேக்டரியிலிருந்து தானே கிடைக்கிறது? என்று கேட்கலாம்.

பேக்டரியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்திற்கு கூடவே சோலார் பவர், காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம் மூலமாகவும் நமக்கு மின்சாரம் கிடைக்கிறது.
 
ECF என்ற ஐரோப்பிய நிறுவனத்தின் அறிக்கையின்படி,  ஒரு கிலோமீட்டருக்கு பெட்ரோல் ஸ்கூட்டரால் ஏற்படும் புகையானது எலக்ட்ரிக் ஸ்கூட்டரினால் ஏற்படும் புகையை காட்டிலும் 13 மடங்கு அதிகம்.
2. Fuel Cost
இன்றைய பெட்ரோலின் விலை 85 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் பெட்ரோல் ஸ்கூட்டரில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 1.40 ரூபாய் செலவாகிறது. ஆனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 20 பைசா தான் செலவாகிறது.
 
இதுவே ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்க பெட்ரோல் ஸ்கூட்டரில் 1,400 ரூபாயும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 200 ரூபாயும் செலவாகிறது.
 
மேலும் கடந்த சில வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பிரச்சனையின் காரணமாக பெட்ரோல் விலை நிலையாக இல்லாமல் மிகுந்த ஏற்றத்தை சந்திக்கிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் அதிகப்படியான வரி பெட்ரோல் போடுபவர்களையே பாதிக்கிறது.
 
ஆனால் Electricity Charges நிலையாக இருப்பதுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் ஸ்கூட்டருக்கு செய்யும் Charge மொத்தமாக EB Bill-ல் வருவதால் தனியாக செலவு செய்ய தேவையில்லை.

3. எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் Performance
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டும்போது எந்த ஒரு சத்தமும் வராது. மேலும் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்துவதால் எந்த ஒரு அதிர்வும், அதாவது வைப்ரேஷன் கிடையாது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் சைலன்ட் ஆகவும், ஸ்மூத் ஆகவும் ஓடக்கூடியது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எடை குறைவாக இருப்பதால் மிகவும் எளிமையாக கையாளலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மோட்டாரின் உதவியுடன் 0-60 km வேகத்தை பெட்ரோல் ஸ்கூட்டர் காட்டிலும் மிக வேகமாக அடைந்துவிடும்.

4. பராமரிப்பு
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை maintenance செய்வதும் அதற்கான செலவுகளும் மிக மிக குறைவு. ஏனெனில் பெட்ரோல் ஸ்கூட்டர் ஓடுவதற்கு அதிக உதிரிபாகங்கள் உடைய எஞ்சின், கியர் பாக்ஸ் போன்ற பாகங்கள் தேவைப்படுகிறது. இதற்கான maintenance செலவுகளும் அதிகம்.

ஆனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் Maintenance free Battery-யுடன் மோட்டார் மட்டுமே வாகனத்தை இயக்க தேவைப்படுகிறது.
 
5. சார்ஜ் செய்வது
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டிலேயே நமது தேவைக்கு ஏற்ப சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் நாம் பெட்ரோல் பங்கிற்கு செல்ல வேண்டிய அவசியமும் பெட்ரோல் செலவும் கிடையாது.
மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் Disadvantagesஐ பார்ப்போம்.


இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒரு சில Disadvantages இருந்தாலும் தற்போது வாகன உற்பத்தியாளர்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை improve செய்து அதனுடைய Disadvantagesஐ குறைத்துக்கொண்டே வருகிறார்கள்.


1. Charging time
கடந்த காலங்களில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபுல் சார்ஜ் செய்வதற்கு 6-8  மணி நேரம் வரை ஆகும். இப்போது அறிமுகமாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 3-4 மணி நேரத்திற்குள் ஃபுல் சார்ஜ் ஆகிற மாதிரி டிசைன் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் மொபைல் போனைப் போல இரண்டு மணி நேரத்திற்குள் ஃபுல் சார்ஜ் செய்வதற்காக முயற்சிகளும் நடந்து வருகிறது.
 
2. எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை
கடந்த காலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை, பெட்ரோல் ஸ்கூட்டரின் விலையை விட சற்று அதிகம். தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியான விலையிலும் அதற்கு குறைவான விலையிலும் அறிமுகப்படுத்துகிறார்கள்.
 
3. Warranty
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாகன உற்பத்தியாளர்கள் மூன்று வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை Warranty தருகிறார்கள். எனவே பெட்ரோல் ஸ்கூட்டர்களை போல அதிக வருடம் மற்றும் கிலோமீட்டர்களுக்கு பயன்படுத்த முடியாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
 
4. வேகம் மற்றும் தூரம்
தற்போதைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களை போல அதிக வேகமாக செல்ல இயலாது. மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். மீண்டும் பயணிக்க சார்ஜ் செய்ய வேண்டும். இதனால் நீண்ட தூரம் பயணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
 
இறுதியாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை யார் வாங்கலாம் என்று பார்ப்போம்.

அதிகமாக சிட்டி டிராபிக்கில் பயணிப்பவர்களுக்கும், அருகில் அலுவலகம் இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


அதிர்வு இல்லாத இந்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், வயதானவர்கள் மற்றும் இளம் பெண்கள் சூப்பர் மார்க்கெட் செல்ல, குழந்தைகளை பள்ளியில் விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் அதிகப்படியான பெட்ரோல் செலவை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.


ஆனால் அதிகமாக நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும், வேகமாக ஓட்டக்கூடிய இளைஞர்களுக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Suit ஆகாது.