எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் Lead-Acid பேட்டரி நல்லதா? Lithium-ion பேட்டரி நல்லதா?
1. பேட்டரியின் எடை மற்றும் இடவசதி
150 வருடங்களாக சந்தையில் நிலைத்து நிற்கும் Lead-Acid பேட்டரியின் எடை அதிகம். மேலும் இதற்கு தேவைப்படும் இடவசதியும் சற்று அதிகம்.
ஆனால் சில வருடங்களாக பிரபலமாக விளங்குகிற Lithium-ion பேட்டரியின் எடை குறைவாக இருப்பதுடன், இதற்கு தேவைப்படும் இட வசதியும் குறைவு.
2. சார்ஜ் செய்யும் நேரம்
Lead-Acid பேட்டரியில் 80% வரை வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால் 20% சார்ஜ் செய்ய அதிக நேரம் பிடிக்கும். மேலும் Lead-Acid பேட்டரியில் 100% ஃபுல் சார்ஜை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பேட்டரியின் ஆயுள் குறையும்.
ஆனால் Lithium-ion பேட்டரியில் சார்ஜ் செய்வதற்கான நேரம் குறைவு. அதாவது 800 watt DC மோட்டாரை இயக்க தேவைப்படும் Lead-Acid பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 5 மணி நேரம் செலவாகும். ஆனால் இதற்கு பயன்படும் Lithium-ion பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரம்தான் செலவாகும்.
மேலும் பேட்டரியை போல கட்டாய ஃபுல் சார்ஜ்ஜிங் இந்த Lithium-ion பேட்டரியில் தேவையில்லை. எனவே இந்த Lithium-ion பேட்டரியில் நமது தேவைக்கு ஏற்ப ஃபுல் சார்ஜ் அல்லது பகுதி சார்ஜ் செய்து கொள்ளலாம்.
3. செயல்திறன்
Lead-Acid பேட்டரியில் ஒரு முழு சார்ஜ்க்கு 85 சதவீத பவரை கொடுக்கும். மீதி 15% பவர் வீணாகிவிடும். ஆனால் Lithium-ion பேட்டரி ஆனது ஒரு ஃபுல் சார்ஜ்க்கு ஏறத்தாழ 100% பவரை கொடுக்கும்.
4. Voltage drop
Lead-Acid பேட்டரியில் சார்ஜ் குறைய குறைய Output voltage drop-ஆகி கொண்டே வரும். ஆனால் Lithium-ion பேட்டரி 20 சதவீத சார்ஜ்ஜிலும் 80 சதவீத சார்ஜை போல Output voltage-ஐ கொடுக்கும். இதனால் இந்த Lithium-ion பேட்டரியின் செயல் திறன் சிறப்பாக இருக்கிறது.
5. இதன் விலை
உலமெங்கும் அதிகளவில் உபயோகப்படுத்தப்படும் இந்த Lead-Acid பேட்டரியின் விலை குறைவு. ஆனால் Lithium-ion பேட்டரியின் விலை அதிகம். இருந்தாலும் இந்த Lithium-ion பேட்டரியின் ஆயுளானது, Lead-Acid பேட்டரியை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.
இறுதியாக குறைந்த எடை, fast charging, 100% செயல்திறன் மற்றும் குறைந்த சார்ஜ்ஜிலும் நல்ல Output voltage கொடுக்கக்கூடிய Lithium-ion பேட்டரி உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சிறந்தது.