மோட்டார் பைக்கில் Spoke Wheel நல்லதா? Alloy wheel நல்லதா?

மோட்டார் பைக்கில் சக்கரங்கள் என்று வரும் போது இந்தியர்கள் அதிகமாக விரும்புவது Alloy wheel பொருத்தப்பட்ட மோட்டார் பைக்கை தான்.இதற்கான காரணத்தை மேலோட்டமாக பார்க்கும்போது Alloy wheel-களில் உள்ள சிம்பிளான டிசைன் மற்றும் அழகிய வடிவமைப்பு.

இந்த Alloy wheel உள்ள மோட்டார் பைக்குகள் கடந்த சில வருடங்களாக மிகவும் எளிமையாக கிடைக்கிறது. இதுவே 20 வருடங்களுக்கு முன்பு கம்பிகள் பொருத்தப்பட்ட  Spoke wheel உள்ள மோட்டார் பைக்குகளே வாகன விற்பனையில் இருந்தது.

தற்போது வாகன உற்பத்தியாளர்கள் entry level பைக்குகளில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் Spoke wheel மற்றும் alloy wheel-னு இரண்டு விதமான தேர்வுகளில் கொடுக்கிறார்கள்.

எனவே லுக் மற்றும் ஸ்டைலுக்காக Alloy சக்கரத்தை மட்டும் தேர்ந்தெடுக்காமல் சரியான சக்கரத்தை தேர்ந்தெடுப்பதை பற்றி கீழே பார்க்கலாம்.

மேலும் off road மற்றும் அட்வென்ச்சர் பைக்குகளில் ஏன் Spoke சக்கரத்தை மட்டும் கொடுக்கிறார்கள்? மற்றும் Sports பைக்குகளில் ஏன் Alloy சக்கரத்தை மட்டும் கொடுக்கிறார்கள்?. இதற்கான விடையையும் கீழே பார்க்கலாம்.

Spoke Wheel

Steel மற்றும் மெட்டலினால் உருவாக்கப்பட் கம்பியின் ஒருபுறமானது சக்கரத்தின் நடுவிலும், மறுபுறமானது வட்ட வடிவ ரிம்மிலும் (rim) இணைக்கப்பட்டிருக்கும். இந்த கட்டமைப்பே Spoke சக்கரத்திற்கு நெகிழ்வு (வளையத்தக்க) தன்மையை தருகிறது.

கரடுமுரடான மேடு பள்ளங்களில் நாம் பைக் ஓட்டும் போது Shock-ஆனது  முதலில் தரையுடன் தொடர்புடைய டயருக்கு தான் வரும். அடுத்ததாக டயரில் இருந்து Spoke wheel-க்கு செல்லும். அதன்பின்பே Shock-ஆனது main suspension-க்கு செல்லும்.

இதில் டயரானது ரப்பரினால் உருவாக்கப் பட்டிருப்பதால் சிறிது Shock-ஐ absorb செய்துகொண்டு Spoke wheel-க்கு அனுப்பும். Spoke wheel-லின் சிறந்த நெகிழ்வு தன்மையின் (flexible property) காரணமாக அதிகப்படியான Shock-ஐ தாங்கிக் கொண்டு main suspension-க்கு அனுப்பும். அதன் பின்பு Shock-க்கினை முழுமையாக Main suspension எடுத்துக்கொள்ளும். 

கரடு முரடான மற்றும் மேடு பள்ளங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான Shock-ஐ தாங்கும் நெகிழ்வுத்தன்மை (flexible property), Spoke Wheel-ல் இருப்பதால் off road மற்றும் அட்வென்ச்சர் பைக்குகளில் Spoke Wheel-லை மட்டும் பயன்படுத்துகிறார்கள். 

Alloy wheel

அலாய் வீல்கள் Light weight உடைய அலுமினியம் அல்லது மெக்னீசியம் உலோகத்தால் வார்ப்பு (casting) முறையில் தயாரிக்கப்படுகிறது. அலாய் வீல்கள் Spoke Wheel-லை காட்டிலும் எடை குறைவாக இருப்பதால் மோட்டார் பைக்கின் செயல்திறனும் மைலேஜும் கணிசமான அளவில் அதிகமாக கிடைக்கிறது. 

மேலும் அலாய் வீல்கள் வார்ப்பு (casting) முறையில் தயாரிக்கப்படுவதால் மிகுந்த உறுதியுடனும், வலிமை வாய்ந்ததாகவும் இருக்கிறது. 

அதிக வேகத்தில் பைக்கை செலுத்தும் போது அலாய் வீல்கள் பைக்கிற்கு சிறந்த நிலைத்தன்மையை (stability) கொடுக்கிறது. ஆனால் Spoke wheel-லின் நெகிழ்வு தன்மையின் (flexible property) காரணமாக அதிக வேகத்தில் சிறந்த நிலைத்தன்மையை (stability) கொடுக்க முடிவதில்லை. 

எனவே அதிக வேகத்தில் செல்லும் Sports பைக்குகளில் சிறந்த நிலைத்தன்மைக்காகவும் மற்றும் செயல்திறனை அதிகப்படுத்துவதற்காகவும் Light weight உடைய அலாய் வீலை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

இப்பொழுது உங்களுக்கு Sports பைக்குகளில் சிறந்த நிலைத்தன்மைக்காக அலாய் வீலையும், Off road பைக்குகளில் நெகிழ்வுத்தன்மைக்காக Spoke wheel-லையும் பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்திருக்கும்.

யாருக்கு பொருந்தும்?

குண்டும் குழியுமாக கிராமப்புற சாலைகள், மேடு பள்ளமான மண் சாலைகள் மற்றும் மலைப்பிரதேச சாலைகளில் பைக் ஓட்டுபவர்களுக்கு Spoke wheel உள்ள entry level பைக்கை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

மேலும் இந்த Spoke சக்கரத்தில் ஏற்படும் bend-களை மெக்கானிக் உதவியுடன் குறைந்த செலவில் சரி செய்து கொள்ளலாம். எனவே குறைந்த விலையில் பைக் வாங்க நினைப்பவர்கள் Spoke wheel option உள்ள பைக்கை வாங்குவது நல்லது.

நகர்புற தார் சாலைகளில் பயணிப்பவர்கள் மற்றும் வேகமாக பயணிப்பவர்கள் Alloy wheel உள்ள entry level பைக்கை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் Alloy wheel பைக்கின் விலை, Spoke wheel option பைக்கின் விலையைவிட சற்று அதிகம்.