Avoid idling என்றால் என்ன ? தெரிந்து கொள்வோம்.

Avoid idling என்பது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் மைலேஜை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு நல்ல யோசனையாகும். முதலில் idling பற்றி தெரிந்து கொள்வோம். 

idling என்பது எஞ்சின் run-ஆகி வண்டி நகராமல் இருப்பதே ஆகும். இந்த idling தான் மைலேஜின் முதல் எதிரி. இந்த idling நிலைமை டிராபிக் சிக்னலிலும்  மற்றும் எஞ்சினை off செய்யாமல் வண்டியை நிறுத்தி கொண்டு மற்றவர்களுடன் பேசும் போதும் ஏற்படுகிறது.

எனவே டிராபிக் சிக்னலில் அல்லது 10 நிமிடம் அதிகமாக வண்டி idling  இருக்கும் போது, வண்டியின் எஞ்சினை Switch Off செய்வதன் மூலம்  idling-ஐ தவிர்க்கலாம்.

சமீபத்திய ஆராய்ச்சியில் ஒரு நார்மல் காரில் 10 நிமிடம் idling இருக்கும் போது 100ml பெட்ரோல் செலவு ஆகிறது. இதுவே 1.5 மணி நேரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் செலவாகிறது.

மேலும் இந்த idling தவிர்க்கவே Hero Motor Corp நிறுவனம் தன்னுடைய இரு சக்கர வாகனங்களில் i3s (idle start stop) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் 10 நிமிடத்திற்கு அதிகமாக இரு சக்கர வாகனம் idling இருக்கும் போது எஞ்சின் தானாக off ஆகிவிடும்.

மேலும் சுசுகி நிறுவனம் தன்னுடைய கார்கள், டிராபிக் சிக்னலில் நிற்கும்போது எஞ்சின் ஆனது மிக குறைந்த idle speed-ல் இருப்பது போல் வடிவமைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பம் எரிபொருளை மிச்சப்படுத்தி மைலேஜை அதிகப்படுத்துகிறது.

தீர்வு

பல தொழில் நுட்பம் இருந்தாலும் மிகச் சிறந்த எளிய வழி எஞ்சினை off செய்வதுதான். மேலும் வண்டியை எளிமையாக Start செய்வதற்கு சக்தி வாய்ந்த self start வசதி பெரும்பாலான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தற்போது இருக்கிறது.

இந்த வழியானது வண்டியின் மைலேஜை அதிகரிக்க மிக சிறந்த வழியாகும். மேலும் இதனால் காற்று மாசு தடுக்கப்படுகிறது.