வாகனங்களில் Tubeless டயர் பயனுள்ளதா ?

அன்றாட வாழ்வில் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் பைக் மற்றும் கார்களில் பொதுவாக Tube Tyre இருக்கும். தற்போது அறிமுகப்படுத்தப்படும் கார் மற்றும் பைக்குகளில் ட்யூப்லெஸ் டயர் வசதியை வாகன தயாரிப்பாளர்கள் தருகிறார்கள்.

இந்த ட்யூப்லெஸ் டயர் வசதி உடைய சக்கரங்கள் பயன் உள்ளதா ? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வாகனத்தின் சக்கரம்

சக்கரம் என்பது வட்ட வடிவிலான மைய அச்சை பற்றி சுழலக் கூடிய பொருளாகும். இந்த சக்கரம் வாகனத்தின் எடையைத் தாங்கிக் கொண்டு, எஞ்சினில் இருந்து கிடைக்கும் பவர் மற்றும் சுழற்சி உதவியுடன் சுழல்கிறது.

இந்த சக்கர சுழற்சியானது தரையுடன் சரியான உராய்வை ஏற்படுத்திக் கொண்டு வாகனத்தை நகர்த்துகிறது. இந்த நகர்வே நாம் எளிமையாக பயணத்தை மேற்கொள்ள உதவுகிறது.

இந்த சக்கர அமைப்பில் ரப்பரால் ஆன body, காற்று நிரப்பப்பட்ட tube, சக்கரத்தின் rim-வுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரப்பரினால் ஆன அமைப்பே வாகனத்தின் எடையை தாங்கவும், நெகிழ்வு தன்மையுடன் வாகனத்தை நகர்த்த உதவுகிறது.

இந்த சக்கரம் இயற்கையான அல்லது செயற்கையான ரப்பருடன், பிற கெமிக்கல் கலவைகளுடன் இணைத்து தயாரிக்கப்படுகிறது. மேலும் ரப்பர் டயரின் மேற்புறத்தில் உள்ள கோடுகள் தரையுடன் பிடிப்பை ஏற்படுத்த உதவுகிறது.

இந்த காற்று நிரப்பப்பட்ட ரப்பர் டயர்கள் மிதிவண்டி, பைக், கார்கள், பேருந்து, சரக்கு வாகனங்கள் மற்றும் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரப்பர் டயரில் வளிமண்டல காற்று அல்லது நைட்ரஜன் வாயுவை நிரப்பி பயன்படுத்தலாம்.

இந்த ரப்பரால் ஆன சக்கரங்களை பயன்படுத்துவதற்கு முன்பு, மரம் அல்லது உலோகத்தால் ஆன சக்கரங்களே பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த மரம் அல்லது உலோகத்தால் ஆன சக்கரத்தின் அதிக தேய்மானத்தின் காரணமாக, ரப்பரால் ஆன சக்கரங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால் தற்போது Tube டயரில் உள்ள காற்று நிரப்பப்பட்ட குழாய் நீக்கப்பட்டு, மேம்படுத்த வடிவமைப்புடன் Tubeless Tyre சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tubeless Tyre

இந்த Tubeless டயரில் மேற்புற ரப்பர் உடலமைப்பு, சக்கரத்தின் rim-வுடன் air sealant உதவியில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ரப்பர் உடலமைப்பிற்கும் சக்கர rim-க்கும் நடுவில் காற்று நிரப்பப்பட்டிருக்கும். இதுவே Tubeless Tyre-ன் வடிவமைப்பு ஆகும்.

இப்போது இதன் பயன்களை பார்க்கலாம்.

குறைவான பஞ்சர்

நாம் பயணிக்கும் போது ரோட்டில் கிடக்கும் முள்,ஆணி போன்ற கூர்மையான பொருட்களால், காற்று நிரப்பப்பட்ட tube டயரில் காற்று வெளியேறி அடிக்கடி பஞ்சர் ஆகும். இது பயணத்தில் சிரமத்தை தருகிறது. ஆனால் tubeless டயரில் திடமான ரப்பர் அமைப்பு, டயர் பஞ்சர் ஆவதை குறைக்கிறது.

மெதுவான காற்று வெளியேற்றம்

Tubeless டயரில் பஞ்சர் ஏற்படும் போது, காற்று வெளியேறுவது மெதுவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் சிறிது தூரம் பயணித்து சாலை ஓரமாக பாதுகாப்பாக நிற்க உதவுகிறது.

ஆனால் tube டயரில் பஞ்சரின் போது காற்றின் வெளியேற்றம் வேகமாக இருக்கும். இது பெரும்பாலான சமயங்களில் ஆபத்தை உருவாக்கலாம்.

திரவ sealant

புதிய tubeless டயரில் துளை ஏற்படும்போது, அதில் நிரப்பப்பட்டுள்ள திரவ sealant வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் திரவ sealant உலர்ந்து, மெழுகு போல் ஒட்டிக்கொண்டு துளையை மூடுகிறது. இந்த பயனுள்ள முறையால் நீண்ட நெடுங்சாலை பயணத்தின்போது ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படுகிறது.

குறைந்த அழுத்தத்திலும் பயணம்

Tube டயரில் குறைந்த காற்று அழுத்தத்தில் பயணிப்பது டயர் மற்றும் குழாயை பாதிக்கும். எனவே சரியான காற்று அழுத்தத்தை Tube டயரில் பராமரிக்க வேண்டும். ஆனால் நவீன tubeless டயர்கள் குறைந்த காற்று அழுத்ததிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த எடை

குறைந்த எடையுடன் tubeless டயர்கள் வடிவமைக்கப்படுவதால் வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கிறது. ரப்பர் டயர் மற்றும் rim-க்கு நடுவே காற்று சீராக நிரப்பப் பட்டிருப்பதால் tubeless tyre வாகனத்திற்கு சிறந்த நிலைத் தன்மையை கொடுக்கிறது.

Tubeless tyre-ன் குறைகள்

Tubeless டயர்களை எளிதில் கழட்டி மாட்டி விட முடியாது. எனவே அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் நிலையங்களில் சரியான உபகரணங்களை பயன்படுத்தி கழட்டி மாற்ற வேண்டும்.

Tubeless டயரின் பக்கவாட்டில் துளை அல்லது அதிக சேதம் ஏற்படும் போது புதிதாக Tubeless டயரை மாற்ற வேண்டும்.

Tubeless டயர்கள் அதிக விலையிலே கிடைக்கிறது.

இறுதியாக குறைந்த பஞ்சர், ஆபத்து காலங்களில் குறைவான காற்று வெளியேற்றம், சிறந்த நிலைத்தன்மை போன்ற செயல் திறன்களை வழங்குவதால் Tubeless டயர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.