பட்டைய கிளப்பும் ஜாவா பைக் விற்பனை – 50,000 பைக்குகள் விற்றுத் தீர்த்தது

மஹிந்திரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான கிளாசிக் லெஜென்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் கடந்த 2018-ம் வருடம் விண்டேஜ் மோட்டார் பைக்கான ஜாவா மோட்டார் பைக்கை புதிதாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியது. இதில் ஜாவா கிளாசிக், ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என 3 விதமான மாடல்களை அறிமுகப்படுத்தி மோட்டார் சைக்கிள் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது இந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் 50,000 ஜாவா மோட்டார் பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இதைப் பற்றி கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், “இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் புதிதாக நுழைந்த நாங்கள், குறுகிய காலத்தில் அடைந்த வெற்றியைப் பற்றி பெருமை கொள்கிறோம் அடுத்த ஒரு வருடத்திற்க்குள் மேலும் 50,000 ஜாவா மோட்டார் பைக்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். 

இதற்கு ஜாவா மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களை (Dealership) அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.” என்றார்.

தற்போது கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் தன்னுடைய ஜாவா மோட்டார் பைக்குகளை இந்தியா தவிர, நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.