அட்டகாசமான எலக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம் – 25km to 70km தூரம் பயணிக்கலாம் – GoZero Electric Cycle

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோ ஸீரோ (GoZero) என்ற நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக மின்சக்தியில் இயங்கும் எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு,  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் சைக்கிள்களை Skellig, Skellig Lite மற்றும் Skellig Pro என மூன்று வித மாடல்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த எலக்ட்ரிக் சைக்கிள்களை GoZero கம்பெனி இணையதளத்திலும் அல்லது ரிலையன்ஸ் ரீடைல், அமேசான் தளங்களிலும் ஆர்டர் செய்யலாம்.

Skellig மற்றும் Skellig Lite

தற்போதைய காலகட்டத்தில் உலக அளவிலும், இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Skellig மற்றும் Skellig Lite எலக்ட்ரிக் சைக்கிள்களில் 250 Watt DC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்க்கு சக்தியானது 210 Wh திறனுடைய லித்தியம் அயான் பேட்டரி மூலம் கிடைக்கிறது. இந்த பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சக்தி, சைக்கிளின் சக்கரத்தை 800 சுற்றுகளை சுழல வைக்கிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் பெடல் அசிஸ்ட் (Pedal Assist) வசதி உள்ளது. அதாவது பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் பெடலை அழுத்தி சாதாரண சைக்கிளை போல பயணிக்கலாம்.

இந்த Skellig மற்றும் Skellig Lite மாடல்கள் அதிகபட்சமாக 25 kmph வேகத்தில் பயணிக்கும். மேலும் இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் ஒரு முழு சார்ஜ்க்கு 25 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியை தனியாக கழட்டி சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. மேலும் ஒரு முழு சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும்.

இந்த Skellig Lite மாடலில் மேம்படுத்தப்பட்ட Suspension அமைப்பு மற்றும் V-brake வசதி கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

Skellig Pro

இந்த Skellig Pro எலக்ட்ரிக் சைக்கிள், கிராமப்புற மண் சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 400 Wh திறனுடைய லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது சைக்கிளின் சக்கரத்திற்கு 2000 சுழற்சியை தருகிறது.

இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 7 வேக கியர் அமைப்பு, மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், Disc-brake வசதி, 4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே (LCD Display) வசதி உள்ளது. இந்த எலக்ட்ரிக் சைக்கிள் அதிகபட்சமாக 25 kmph வேகத்திலும், ஒரு முழு சார்ஜ்க்கு 70 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். மேலும் ஒரு முழு சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும்.

விலை

  • Skellig       –  Rs. 19,999/-
  • Skellig Lite – Rs. 24,999/-
  • Skellig Pro – Rs. 34,999/-

இந்த எலக்ட்ரிக் சைக்கிளை குறைந்த தூரம் பயணிப்பவர்கள், வயதானவர்கள் மற்றும் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த நினைப்பவர்கள் வாங்கி பயன்படுத்தலாம்.