இந்தியாவில் முதல் Artificial Intelligence எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் – 22 Motor Flow

இந்திய தயாரிப்பு நிறுவனமான 22 Motors கம்பெனி புத்தம் புதிய Flow-ங்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த Flow எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 22 Motors கம்பெனியின் முதல் வாகன தயாரிப்பு ஆகும்.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உயர்ந்த தொழில் நுட்பமான ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள் மற்றும் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

22 Motor Flow எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் Artificial Intelligence தொழில் நுட்பத்தில் செயல்படும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் Bosch கம்பெனியால் உருவாக்கப்பட்ட DC motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2100 வாட் பவரை கொடுக்கிறது.

லித்தியம் அயான் பேட்டரியினால் செயல்படும் இந்த ஸ்கூட்டரை ஒரு முழு சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகிறது. மேலும் 70% சார்ஜை ஒரு மணி நேரத்தில் செய்து கொள்ளலாம். குறைவான எடையுள்ள இந்த லித்தியம் அயான் பேட்டரியை எளிதாக கழட்டிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 5 Amp Socket போதுமானது.

இந்த Flow எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு முழு சார்ஜ்க்கு 80 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். மேலும் கம்பெனி தரப்பிலிருந்து கூடுதலாக இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள். இதன் மூலம் நீங்கள் 160 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இந்த Flow எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்சம் வேகம் 60 kmph ஆகும்.

முழுவதும் ஃபைபர் பாடினால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரின் மொத்த எடையானது 85 கிலோ ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் Front and Rear disc brake-வுடன் Combi Braking System வசதியை கொடுத்திருக்கிறார்கள்.

150 கிலோ எடை வரை, அதாவது இரண்டு நபர்களை தாங்கி செல்லும் இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் Telescopic Suspension-யும், பின்புறத்தில் Dual Hydraulic Suspension-யும் கொடுத்திருக்கிறார்கள். மேலும் இந்த ஸ்கூட்டரில் இரண்டு ஹெல்மெட்டுகளை சீட்டுக்கு அடியில் வைக்கும் அளவுக்கு இடவசதி இருக்கிறது.

Artificial Intelligence தொழில் நுட்பத்தின் பயன்கள்

இந்த Flow எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், பெட்ரோல் ஸ்கூட்டரை போல 1000km, 2000 km-க்கு கண்டிப்பான சர்வீஸ் செய்ய தேவையில்லை. நம்முடைய ஓட்டும் நடத்தைக்கு (Driving behaviour) தகுந்தவாறு சர்வீஸ் செய்ய வேண்டிய நேரத்தை கணக்கிட்டு எச்சரிக்கை செய்யும்.

மேலும் இந்த ஸ்கூட்டரில் பாகங்கள் பழுது ஆவற்கு முன்பே உதிரி பாகங்களை ஆர்டர் செய்யும் வசதி இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில் நுட்பம், விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பே கணித்து உங்களை எச்சரிக்கை செய்யும். இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டாரின் மின்சாரம், மின் அழுத்தம், வெப்பம் போன்ற அளவுகளை தன்னிச்சையாக அளவீட்டு உங்களுக்கு தருகிறது.

மேலும் இந்த Flow எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருப்பிடத்தை Geo fencing தொழில்நுட்பத்தின் உதவியுடன் மொபைல் போன் வழியாக எளிதாக கண்காணித்து தெரிந்து கொள்ளலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ப்ளூடூத் வழியாக இணைத்து, அனைத்து தகவல்களையும் மொபைல் செயலியில் (Mobile App) பெறலாம். 

22 Motors Flow விலை

இந்த Flow எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சென்னை ஷோரூம் விலை – ரூ. 74,740

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *