How ABS works – Explanation in Tamil

 
 
ABS அறிமுகம்:
இன்று நாம் இருசக்கர வாகனத்தில் உள்ள பிரேக்கிங் தொழில்நுட்பமான ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பற்றி தெரிந்து கொள்வோம். 1988-இல் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் K100-க்கிற மோட்டார் பைக்கில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. இதுவே ABS பொருத்தப்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் ஆகும்.
 
இதனைத் தொடர்ந்து Honda, Suzuki, Harely Davidson நிறுவனங்கள் தனது மோட்டார் சைக்கிளில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை (ABS) அறிமுகம் செய்தது.
 
Skidding என்றால் என்ன?
இப்போ Skidding அதாவது வழுக்குதலை பற்றி தெரிந்து கொள்வோம். ஏனென்றால் இந்த Skidding தவிர்க்கவே ABS System கொண்டுவரப்பட்டது. 
 
வாகன ஓட்டி தேவைக்கு அதிகமான பிரேக்கிங்கை சக்கரத்திற்கு கொடுக்கும்போது சக்கரம் தனது சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறது. அதாவது Wheel Lock-ஆகி விடுகிறது. 
 
மேலும் சக்கரத்தின் சுழற்சி முற்றிலும் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் வாகனத்தின் வேக உந்துதலின் காரணமாக சக்கரம் தரையுடன் வழுக்குதலை ஏற்படுத்துகிறது. இந்த Skidding-தான் வாகனம் விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.
 
இந்த நிகழ்வில் முன்வீல் Lock ஆனால் பின்வீ லின் சுழற்சி காரணமாக வாகனம் பக்கவாட்டில் Skid ஆகும். அல்லது பின்வீல் Lock ஆனால் முன்வீலின் சுழற்சி காரணமாக முன்புறம் இழுத்து செல்லப்படும். இந்த இரண்டு நிகழ்வுமே ஓட்டுநரின் Steering கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்துகிறது.
 
 
இந்த Wheel Locking-க்கு காரணம் Normal bike-களில் நாம் கொடுக்கக்கூடிய அதிகப்படியான பிரேக்கிங் அப்படியே சக்கரத்திற்கு சென்று விடுவதுதான். ஆனால் ABS உள்ள bike-ல் அதிகப்படியான பிரேக்கிங்கை கொடுத்தாலும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் Wheel Locking-கை தடுக்கிறது. இந்த ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) செயல்படும் விதத்தை கீழே பார்ப்போம்.
 
ABS செயல்படும் விதம்:
இந்த ABS சிஸ்டத்தில் இரண்டு சக்கரத்திலும் இரண்டு சென்சார்கள் உள்ளன மற்றும் இருக்கைக்கு அடியில் Electronic Control Unit அதாவது ECU-வுடன் ஹைட்ராலிக் வால்வுகள் உள்ளது.
இந்த இரண்டு சென்சார்களும் இரண்டு சக்கரத்தின் சுழற்சியை அளவிட்டு தனித்தனியாக ECU- விற்கு அனுப்புகிறது. இந்த ECU- வின் வேலை ஹைட்ராலிக் வால்வுகள் மூலம் பிரேக்கிங்கை கட்டுப்படுத்துவதுதான். 
 
இப்பொழுது ஓட்டுநர் Brake-கை பிடிக்கும்போது சக்கரத்தின் வேகம் குறையும். இந்த சமயத்தில் ECU சிஸ்டம் ஹைட்ராலிக் வால்வுகள் மூலம் மற்றொரு சக்கரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி இரண்டு சக்கரங்களையும் ஒரே சுழற்சியில் சுழல வைக்கிறது. 
 
இரண்டு சக்கரங்களின் வேகமும் ஒரே சுழற்சி வந்தவுடன் ECU சிஸ்டம் Brake-கை release செய்கிறது. ஆனால் ஓட்டுநர் Brake-கை தொடர்ந்து பிடித்துக் கொண்டிருப்பதால் மீண்டும் சக்கரத்தில் பிரேக் செயல்பட்டு வேகம் குறைகிறது. உடனே ECU சிஸ்டம் மற்றொரு சக்கரத்தின் வேகத்தைக் குறைத்து இரண்டு சக்கரங்களையும் ஒரே சுழற்சியில் சுழல வைக்கிறது. 
 
மேலும் ஒரே சுழற்சி வந்தவுடன் ECU System பிரேக்கிங்கை release செய்கிறது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வண்டியின் வேகம் குறைகிறது.
 
இந்த ABS சிஸ்டத்தில் Brake-ஆனது விட்டுவிட்டு பிடிக்கப்பட்டு இரண்டு சக்கரங்களையும் ஒரே சுழற்சியில் சுழல வைப்பதால் Wheel locking தடுக்கப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய Skidding-ம் தவிர்க்கப்படுகிறது.
 
இவ்வாறாக ABS Braking மூலம் Wheel locking மற்றும் Skidding தவிர்க்கப்படுவதால் ஓட்டுநர் எளிதாக Steering கட்டுப்படுத்தி விபத்தை தவிர்க்க முடிகிறது. மேலும் குறைந்த தூரத்திலும் வாகனத்தை நிறுத்த உதவுகிறது.
 
இந்த ABS சிஸ்டம் பற்றிய விளக்கம் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.