ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு சக்தி கிடைக்கிறது தெரியுமா ?

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாம் அதை இயக்க தேவைப்படும் பெட்ரோலின் சக்தியை பற்றி தெரிந்து கொள்வோம்.

முன்னுரை

பூமிக்கு அடியில் கிடைக்கும் கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆனது பிரித்து எடுக்கப்படுகிறது. வாகன போக்குவரத்திற்காக பெட்ரோல் ஆனது என்ஜினில் எரிபொருளாக பயன்படுகிறது. குறிப்பாக மோட்டார் பைக், கார்கள், மிகப் பெரிய கப்பல்கள் மற்றும் விமானங்களில் எரிபொருளாக பயன்படுகிறது

 

1858 ஆம் வருடத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆனது வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இன்ஜினியர் கண்டுபிடித்த பெட்ரோலில் இயங்க கூடிய வாகன என்ஜினே ஆகும்

அதன்பிறகு ஹென்றி ஃபோர்டின் விடாமுயற்சியால் Model T Ford கார் 1908 இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்த Ford நிறுவனம் 1.5 கோடி கார்களை உற்பத்தி செய்து விற்றது. இதுவே அமெரிக்காவில் மிகப்பெரிய சாலை கட்டமைப்பை உருவாக்க உதவியது.

மேலும் பெட்ரோல், பவர் ஸ்டேஷனில் மின்சாரத்தை உருவாக்கவும் மற்றும் விவசாயத்துறையில் அமோனியா உர தயாரிப்பிலும் பயன்படுகிறது. இதனுடன் ரசாயன துறையிலும் களிம்பு, மெழுகு தயாரிப்பிலும் பயன்படுகிறது.

பெட்ரோலில் கிடைக்கும் சக்தி

இவ்வாறு புரட்சி ஏற்படுத்திய பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்தும் போது ஒரு லிட்டருக்கு 9.1 KWh சக்தியை கொடுக்கிறது. இதில் 9.1 KWh என்பது 9.1 KW மோட்டாரை ஒரு மணி நேரத்திற்கு இயக்கத் தேவைப்படும் சக்தியாகும்

மேலும் 9.1 கிலோவாட் பவரானது 12.3 குதிரை திறனுக்கு ஒப்பாகும். இதில் இருசக்கர அல்லது நான்கு சக்கரம் என எந்த ஒரு எஞ்சினை பயன்படுத்தினாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 9.1 Kwh சக்தியை கொடுக்கிறது.

மேலும் ஒரு லிட்டர் டீசல் ஆனது 10.0 Kwh சக்தியை கொடுக்கிறது. அதிகபட்சமாக ஒரு கிலோ யுரேனியம் 235 எரிபொருளாகப் பயன்படுத்தும் போது 2.2 கோடி Kwh சக்தியை கொடுக்கிறது

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.