பைக், கார்களில் Torque மற்றும் Power எப்போது தேவைப்படுகிறது ?

நம் அன்றாட வாழ்வில் பைக் மற்றும் கார்களை பயணத்திற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த பைக் மற்றும் கார்கள், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க உதவுகிறது. மேலும் பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

இவ்வாறு பயன்படும் கார் மற்றும் பைக்குகளில் நாம் பவரைப் பற்றி கேள்வி பட்டிருப்போம். இந்த பவருடன் சேர்ந்து கிடைக்கும் டார்க்கை பற்றி ஒரு சிலருக்கே தெரியும்.

எனவே இந்த பதிவில் பவர் மற்றும் டார்க்குகான (Torque) தொடர்பை தெரிந்து கொள்வோம். மேலும் பவர் மற்றும் டார்க்கை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான முறையையும் தெரிந்துகொள்வோம்.

முதலில் டார்க்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

டார்க் (Torque)

டார்க் என்பது சுழற்சிக்கு சமமான நேரான சக்தி ஆகும். இந்த Torque-ஐ தமிழில் முறுக்குவிசை என்று அழைக்கப்படுகிறது. இந்த Torque தத்துவம் ஆனது, ஆர்க்கிமிடிஸ் என்ற அறிவியலரால் நெம்புகோல் விதியின்படி உருவாக்கப்பட்டது. இந்த Torque ஒரு அச்சை பற்றி சுழலக்கூடிய ஒரு பொருளை திருப்ப பயன்படுகிறது.

Torque என்ற முறுக்கு விசையை ஆங்கிலத்தில் ‘T‘ என்ற இயற்பியல் குறியீட்டில் அழைக்கிறார்கள். மேலும் இதனுடைய மதிப்பை கீழே உள்ள பார்முலா மூலம் அளவிடுகிறார்கள்.

T = F x r

இதில் F என்பது சக்தியாகும்.  r என்பது முறுக்கு அளவிடப்படும் புள்ளியிலிருந்து விசை கொடுக்கப்படும் புள்ளி வரை உள்ள தூரமாகும். இந்த Torque-ஐ நியூட்டன் மீட்டர் (Nm) என்ற யூனிட்டில் பொதுவாக அளவிடுகிறார்கள்.

பவர் (Power)

பைக் மற்றும் கார்களின் இன்ஜினில் இருந்து கிடைக்கும் பவரை, குதிரை திறன் (hp) அல்லது KW என்ற குறியீடு மூலம் அளக்கப்படுகிறது. பவர் அல்லது சக்தி, பொதுவாக மின் மோட்டார் மற்றும் இன்ஜின்களில் வேலை செய்யப்படும் வீதத்தை குறிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் James Watt என்ற இன்ஜினியர் நீராவி எஞ்சினின் சக்தியை ஒரு குதிரையைக் கொண்டு ஒப்பிட்டு அளந்தார். இதனால் சக்தியானது இன்றளவும் Watt என்ற குறியீட்டில் அளக்கப்படுகிறது. மேலும் ஒரு குதிரை திறன் சக்தியானது 736 Watt என்றும் மதிப்பிடப்படுகிறது.

பவர் மற்றும் டார்க்

பைக் மற்றும் கார் என்ஜினின் வெளியீட்டில் பவர் மற்றும் டார்க் ஒன்றாகவே இணைந்து கிடைக்கிறது. மேலும் என்ஜினின் cc Capacity-க்கு ஏற்றவாறு பவரும், டார்க்கும் கிடைக்கும்.

அதிக cc Capacity உள்ள என்ஜினில் அதிக பவரும், டார்க்கும் கிடைக்கும். குறைவான cc Capacity உள்ள என்ஜினில் குறைவாக பவரும், டார்க்கும் கிடைக்கும். இந்த பவரும், டார்க்கும் எஞ்சினின் Shaft சுழற்சி(rpm) உடனே கிடைக்கிறது.

உதாரணமாக 125சிசி ஹோண்டா சைன் பைக்கின் இன்ஜினில் இருந்து 10.6 hp பவரும், 11 Nm டார்க்கும் கிடைக்கிறது. இன்னும் குறிப்பாக 10.6 hp பவரானது 7500 சுழற்சியிலும் (rpm), 11 Nm டார்க்கானது 6000 சுழற்சியிலும் (rpm) கிடைக்கிறது. எனவே அதிகப் பவரை பெற குறிப்பிட்டுள்ள சுழற்சியில் engine shaft சுழல வேண்டும்.

டார்க்கின் தேவை

பொதுவாக பைக் மற்றும் கார்களில் 5 வேக Gear Box இருக்கும். என்ஜின் Shaft-ல் கிடைக்கும் சுழற்சியானது அடுத்ததாக உள்ள Gear Box-க்கு செல்லும். இதில் என்ஜின் Shaft-ல் கிடைக்கப்பெறும் டார்க் மற்றும் சுழற்சியானது, முதல் கியரின் விகிதப்படி (ratio), குறைவான சுழற்சியுடன் அதிக டார்க்காக மாற்றப்பட்டு சக்கரத்திற்கு கொடுக்கப்படுகிறது. 

அறிவியல் விதிப்படி அதிக டார்க் ஆனது குறைவான சுழற்சியிலே கிடைக்கும்.

இந்த அதிக டார்க் (Torque) ஆனது, சகதியில் மாட்டிக் கொண்டிருக்கும் சக்கரங்களை நகர உதவுகிறது. மேலும் அதிக இழுவிசை ஆனது, அதிக சுமை உள்ள பொருட்களை சுமந்து செல்ல உதவுகிறது.

இந்த அதிக டார்க் உருவாகும் போது என்ஜினில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இதில் வாகனத்தில் பயணிப்பவர்களை எளிதில் சோர்வடைய செய்யும். மேலும் குறைவான சுழற்சியுடன் குறைந்த தூரத்தை அதிக எரிபொருளுடன் கடக்கிறது. இந்த அதிக டார்க், மைலேஜை குறைகிறது.

பவரின் தேவை

என்ஜின் Shaft-ல் கிடைக்கும் சுழற்சியானது அடுத்ததாக உள்ள Gear Box-க்கு செல்லும். இதில் என்ஜின் Shaft-ல் கிடைக்கப்பெறும் பவர் மற்றும் சுழற்சியானது, 5-வது கியரின் விகிதப்படி(ratio), பன்மடங்காக பெருக்கப்பட்டு வாகனத்தில் சக்கரத்திற்கு கொடுக்கப்படுகிறது. 

இந்த அதிக பவர் மற்றும் சுழற்சி காரணமாக வாகனம் வேகமாக பயணிக்கிறது. இவ்வாறாக வேகமான பயணம் தேவைப்படும் போது ஐந்தாவது கியரில் கிடைக்கும் அதிக பவர் மற்றும் சுழற்சி முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் ஐந்தாவது கியரில் அதிக வேகத்தில் செல்லும்போது எஞ்சினின்   அதிர்வுகள் குறைகிறது. இதனால் பயணத்தின் போது ஏற்படும் சோர்வு குறைக்கப்படுகிறது.

ஐந்தாவது கியரில் குறைவான சுழற்சி அதிக சுழற்சியாக மாற்றப்படுவதால், அதிக தூரத்தை குறைந்த எரிபொருளில் கடக்க உதவுகிறது. இது மைலேஜை அதிகப்படுத்துகிறது.

ஆனால் அதிக பவர் மற்றும் சுழற்சி, அதிக சுமை உள்ள பொருட்களை சுமந்து செல்வதற்கு உகந்தது அல்ல.

இந்த பதிவிலிருந்து அதிக டார்க், சகதியில் இருந்து சக்கரத்தை நகர்த்தவும், அதிக சுமையை சுமக்கவும் தேவைப்படுகிறது. மேலும் வேகமாக பயணிக்கவும், அதிக Comfort-உடன் செல்லவும் பவர் தேவைப்படுகிறது என உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஏதேனும் கருத்து இருந்தால் கீழே உள்ள Comment box-ல் தெரிவிக்கவும்.