Flipkart Offer – 70,000/- மதிப்புள்ள ஸ்மார்ட்போன் 24,990/- மட்டுமே – LG G8X ThinQ Dual Screen

பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் பிக் தீபாவளி விற்பனை தற்போது அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை நடைபெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், மடிக்கணினிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன.

இதில் குறிப்பாக LG G8X ThinQ ஸ்மார்ட்போனுக்கு மிகச்சிறந்த தள்ளுபடி விலையை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதனுடைய விபரங்களை கீழே காணலாம்.

LG G8X ThinQ

தற்போது ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களே பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதற்கு போட்டியாக எல்ஜி நிறுவனம் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை போட்டி விலையில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் எல்ஜி நிறுவனம் LG G8X ThinQ ஸ்மார்ட் போனை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் FHD+ தரத்துடன் 6.4 இன்ச் அளவுடைய இரட்டை டிஸ்ப்ளே ஸ்கிரீனை கொண்டுள்ளது. இந்த இரட்டை டிஸ்பிளே ஸ்கிரீன் 360 கோணத்திலும் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த LG G8X ThinQ ஸ்மார்ட்போன் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரை கொண்டுள்ளது. இந்த பிராசஸர், மீடியாடெக் மற்றும் ஸ்னாப்ட்ராகன் 700 பிராசஸரை விட சிறந்த செயல் திறனைக் கொடுக்கும்.

சிறந்த பிரீமியம் தரத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த LG G8X ThinQ ஸ்மார்ட்போனில் 4,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

விவரக் குறிப்புகள்

  • குவால்கேம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
  • 6.4 இன்ச் FHD+ இரட்டை டிஸ்பிளே ஸ்கிரீன்
  • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி
  • Android 9 Pie
  • டூயல் சிம் ஸ்லாட்
  • பின்பக்க கேமரா: 12MP வைடு கேமரா ( 1/2.55 இன்ச் சென்சார், 1.4um, Dual Pixel, OIS) + 13MP  கேமரா (f/2.4, 1.0um, அல்ட்ரா வைடு)
  • 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி
  • முன்பக்க கேமரா: 32MP (1/2.8 இன்ச் சென்சார், 0.8um, வைடு கேமரா)
  • USB Type C-Port
  • ப்ளூடூத் V5.0
  • 4G LTE, வைஃபை ஆதரவு
  • Fingerprint Sensor (Under display, optical)
  • 4000mAh பேட்டரி, 21W வேகமான சார்ஜிங் சப்போர்ட், 9W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • எடை: 192 கிராம்

அவுரா பிளேக் நிறத்தில் கிடைக்கும் இந்த புதிய LG G8X ThinQ ஸ்மார்ட் போனை வாங்கும் போது ஒரு டேட்டா கேபிள், ஒரு இயர் போன், ஒரு கூடுதலான டிஸ்ப்ளே, ஒரு மொபைல் கேஸ், ஒரு போகோ கனெக்டர் மற்றும் ஒரு சிம் பொருத்தும் கருவி போன்ற சாதனங்கள் கிடைக்கிறது.

இரட்டை டிஸ்ப்ளே உள்ள இந்த LG G8X ThinQ ஸ்மார்ட்போன், வருகிற நவம்பர் 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு, பிளிப்கார்ட் இணையதளத்தில் ஃப்ளாஷ்சேல் விற்பனை வழியாக 24,990 ரூபாய் விலையில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை 70,000 ரூபாய் ஆகும். இதுவே அமேசான் தளத்தில் 37,400 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த LG G8X ThinQ ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் ஆரம்ப ஃபிளாஷ் விற்பனையின் போது முதல் 12 மணி நேரத்தில் 1,75,000 ஸ்மார்ட்போன்கள் விற்று தீர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *